/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 2026 தேர்தலோடு தி.மு.க., காணாமல் போய்விடும் மாஜி., அமைச்சர் சம்பத் சாபம் 2026 தேர்தலோடு தி.மு.க., காணாமல் போய்விடும் மாஜி., அமைச்சர் சம்பத் சாபம்
2026 தேர்தலோடு தி.மு.க., காணாமல் போய்விடும் மாஜி., அமைச்சர் சம்பத் சாபம்
2026 தேர்தலோடு தி.மு.க., காணாமல் போய்விடும் மாஜி., அமைச்சர் சம்பத் சாபம்
2026 தேர்தலோடு தி.மு.க., காணாமல் போய்விடும் மாஜி., அமைச்சர் சம்பத் சாபம்
ADDED : ஜூலை 23, 2024 11:22 PM
கடலுார் : தமிழகத்தில், வரும் 2026 தேர்தலோடு தி.மு.க, காணாமல் போய்விடும் என, முன்னாள் அமைச்சர் சம்பத் பேசினார்.
கடலுாரில், மின்கட்டண உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியது:
தமிழகத்தில் 3 ஆண்டு தி.மு.க,. ஆட்சியில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2011 தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தில் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்பட்டதால் அப்போது, தி.மு.க., ஆட்சியை இழந்தது.
அதேபோன்று, மின் கட்டண உயர்வால், 2026 தேர்தலோடு தி.மு.க., ஆட்சி பறிபோய்விடும்.
தமிழகத்தில் 2011ல், ஜெயலலிதா பதவியேற்ற 6 மாதங்களில் மின் உற்பத்தியை அதிகரித்து, 10 ஆண்டுகாலம் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக வைத்திருந்தார். இது ஒரு வரலாற்று சாதனை.
ஆனால் தற்போது மின்கட்டணம் உயர்த்தப்பட்டதால் 2 கோடி மக்கள் பாதிப்பு அடைவர். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 8000 ரூபாய் மின் கட்டணம் செலுத்திய நான், தற்போது தி.மு.க., ஆட்சியில் 32 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது.
2022-23ல், 14 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் பெற்ற தமிழக மின்சார வாரியம் 2024 ஏன் கடனாளியானது. ரூ. 6க்கு வாங்க வேண்டிய மின்சாரத்தை 20 ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள்.
இதில் எவ்வளவு கமிஷன் கிடைக்கும் என்று பொதுமக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பால் விலை, வீட்டு வரி, சொத்து வரி, பத்திரப்பதிவு உயர்ந்திருக்கிறது. ரேஷன் கடைகளில் பருப்பு இல்லை, பாமாயில் இல்லை. ரேஷன் கடைக்கு பருப்பு வாங்குவதில் காண்ட்ராக்டர் கமிஷன் ஒத்துவராததால் தான் இதுவரை பருப்புக்கு டெண்டர் விடவில்லை.
தி.மு.க.,வின் தோழமைக் கட்சிகள் ஏன் இதுவரை இதை கேட்கவில்லை. எனவே, தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி வந்தால்தான் மக்கள் வளம் பெறுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.