/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தி.மு.க., ஆர்ப்பாட்டம் மா.செ., அழைப்பு தி.மு.க., ஆர்ப்பாட்டம் மா.செ., அழைப்பு
தி.மு.க., ஆர்ப்பாட்டம் மா.செ., அழைப்பு
தி.மு.க., ஆர்ப்பாட்டம் மா.செ., அழைப்பு
தி.மு.க., ஆர்ப்பாட்டம் மா.செ., அழைப்பு
ADDED : ஜூலை 27, 2024 02:58 AM
சிறுபாக்கம்: விருத்தாசலத்தில் நடக்கும் தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் என மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
நிதி அறிக்கையில் தமிழக மக்களை வஞ்சித்த பா.ஜ., அரசை கண்டித்து கடலுார் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் விருத்தாசலம் அலுவலகம் முன் இன்று காலை 10:00 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
மாவட்ட அவைத் தலைவர் நந்தகோபாலகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். இதில், தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி செயலாளர்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள், அனைத்து சார்பு அணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் திரளாக பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.