/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தி.மு.க., முகவர்கள் கூட்டம்: அமைச்சர் ஆலோசனை தி.மு.க., முகவர்கள் கூட்டம்: அமைச்சர் ஆலோசனை
தி.மு.க., முகவர்கள் கூட்டம்: அமைச்சர் ஆலோசனை
தி.மு.க., முகவர்கள் கூட்டம்: அமைச்சர் ஆலோசனை
தி.மு.க., முகவர்கள் கூட்டம்: அமைச்சர் ஆலோசனை
ADDED : ஜூன் 02, 2024 05:41 AM

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில், லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக, தி.மு.க., முகவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
கூட்டத்திற்கு கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர், அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். வி.சி., கட்சி சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். காணொளி வாயிலாக நடந்த கூட்டத்தில் தி.மு.க., முன்னாள் எம்.பி.,ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை செயலாளர் இளங்கோ எம்.பி., உள்ளிட்டோர் கலந்துகொண்டு முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
கூட்ட முடிவில் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், கட்சி தலைமை அறிவுறுத்தலின்படி ஓட்டு எண்ணிக்கை பணியில் முகவர்கள் ஈடுபட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் முத்துசாமி, தங்க ஆனந்தன், சோழன், நகர செயலாளர் கணேசமூர்த்தி, குறிஞ்சிப்பாடி பாலமுருகன், இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திகேயன் மற்றும் தி.மு.க., வி.சி., நிர்வாகிகள் பங்கேற்றனர்.