/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாவட்டத்தில் 'லோக் அதாலத்' : ரூ.20.45 கோடிக்கு தீர்வு மாவட்டத்தில் 'லோக் அதாலத்' : ரூ.20.45 கோடிக்கு தீர்வு
மாவட்டத்தில் 'லோக் அதாலத்' : ரூ.20.45 கோடிக்கு தீர்வு
மாவட்டத்தில் 'லோக் அதாலத்' : ரூ.20.45 கோடிக்கு தீர்வு
மாவட்டத்தில் 'லோக் அதாலத்' : ரூ.20.45 கோடிக்கு தீர்வு
ADDED : ஜூன் 09, 2024 03:06 AM

கடலுார் : கடலுார் கோர்ட்டில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் 'லோக் அதாலத்' எனும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி ஜவஹர் தலைமை தாங்கினார். முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி விஜயகுமார், மோட்டார் வாகன விபத்து வழக்குகளின் இரண்டாவது சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி பிரகாஷ், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நாகராஜன், முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதி வேடியப்பன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் அன்வர் சதாத், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பத்மாவதி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 வனஜா, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்- 2, கவியரசன் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், லாயர்ஸ் அசோசியேஷன் செயலாளர் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.
சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி நீதிமன்றங்களில் அந்தந்த நீதிபதிகள் முன்னிலையில் மக்கள் நீதிமன்றம் நடந்தது.
மாவட்டம் முழுதும் மோட்டார் வாகன விபத்து, சிவில், ஜீவனாம்சம் தொழிலாளர் நலன், சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்கு, பண மோசடி, நிலம் எடுப்பு, குடும்ப நலன் ஆகியவை சார்ந்த 4,596 வழக்குகள் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், 1,430 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, 20 கோடியே 45 லட்சத்து 5 ஆயிரத்து 607 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.