ADDED : ஜூன் 22, 2024 04:54 AM

கடலுார் : கடலுார், திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கும் விழா நடந்தது.
அகர்வால் சுவீட்ஸ் நிறுவனத்தின் சுசிலா அறக்கட்டளை சார்பில் அகர்வால் சுவீட்ஸ் இயக்குனர் சாகர் எழிலரசன் தலைமை தாங்கி, 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான 300 மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர், ஓய்வு பெற்ற அஞ்சலக மக்கள் தொடர்பு அதிகாரி தண்டபாணி, கராத்தே பயிற்சியாளர் சென்சாய் கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தலைமை ஆசிரியை தேன்மொழி நன்றி கூறினார்.