Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுார் அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி மாணவர் சேர்க்கை

கடலுார் அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி மாணவர் சேர்க்கை

கடலுார் அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி மாணவர் சேர்க்கை

கடலுார் அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி மாணவர் சேர்க்கை

ADDED : ஜூலை 06, 2024 04:55 AM


Google News
கடலுார்: கடலுார் அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

கடலுார் அரசு ஐ.டி.ஐ., துணை இயக்குனர் பரமசிவம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கடலுார் அரசு ஐ.டி.ஐ.,யில் 2024-25ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த 1ம் தேதி துவங்கி, வரும் 15ம் தேதி வரை சேர்க்கை நடக்கிறது. காலியாக உள்ள இடங்களுக்கு முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் நேரடி சேர்க்கை நடக்கிறது.

ஐ.டி.ஐ.,யில் சேரும் அனைவருக்கும் கல்வி உதவித் தொகையாக மாதம் 750 ரூபாய், புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் கூடுதலாக மாதம் 1,000 ரூபாயும் வழங்கப்படும்.படிக்கும் போதே பிரபல நிறுவனங்களில் கேம்பஸ் இண்டர்வியூ நடத்தி வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படுகிறது. பயிற்சி கட்டணம் இல்லை. பாட புத்தகங்கள், சீருடை, சைக்கிள், பஸ் பாஸ் இலவசம்.இன்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ், சின்சி மெசினிங், எலக்ட்டிரிக் வெகிக்கில் மெக்கானிக், கம்ப்யூட்டர் டிசைனிங் உள்ளிட்ட அதிநவீன தொழில் பிரிவு பயிற்றுவிக்கப்படுகிறது. வெல்டர் பிரிவுக்கு 8ம் வகுப்பும் மற்ற பிரிவுகளுக்கு 10ம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆண், பெண் இருபாலருக்கும் விடுதி வசதி உண்டு.மேலும், விவரங்களுக்கு 04142-290273 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us