/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சுகாதார நிலையத்திற்கு டிஜிட்டல் எக்ஸ்ரே மிஷின் சுகாதார நிலையத்திற்கு டிஜிட்டல் எக்ஸ்ரே மிஷின்
சுகாதார நிலையத்திற்கு டிஜிட்டல் எக்ஸ்ரே மிஷின்
சுகாதார நிலையத்திற்கு டிஜிட்டல் எக்ஸ்ரே மிஷின்
சுகாதார நிலையத்திற்கு டிஜிட்டல் எக்ஸ்ரே மிஷின்
ADDED : ஜூலை 08, 2024 04:46 AM

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுகாதாரத் துறை மூலம் புதிய டிஜிட்டல் எக்ஸ்ரே மிஷின் வழங்கப்பட்டுள்ளது.
நடுவீரப்பட்டு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 14 ஆண்டுகளாக எக்ஸ்ரே பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கிருந்த எக்ஸ்ரே மிஷின் பழுதடைந்தது,.
இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர், முதன்மை கதிர் வீச்சாளர் ஆகியோர் விடுத்த கோரிக்கையின் பேரில், சுகாதாரத்துறை அதிகாரிகள் நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய டிஜிட்டல் எக்ஸ்ரே மிஷின் வழங்கினர். புதிய எக்ஸ்ரே மிஷின் மூலம் 5 நிமிடத்தில் எக்ஸ்ரே படத்தினை எடுத்து நோயாளிகளிடம் கொடுக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் நோயாளிகள் வெளி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் பட்சத்தில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் எடுத்த எக்ஸ்ரே படத்தினை ஆன்லைன் மூலம் அனுப்பும் வசதியும் இருப்பதாக தெரிவித்தனர்.