/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நீட் தேர்வு ரத்த கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம் நீட் தேர்வு ரத்த கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வு ரத்த கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வு ரத்த கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வு ரத்த கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 22, 2024 04:40 PM

கடலுார் : மத்திய அரசு, தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும், நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து புலன் விசாரணை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலுாரில் மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் அமர்நாத், ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம் முன்னிலை வகித்தனர். மாநில குழு உறுப்பினர் ரமேஷ்பாபு கண்டன உரையாற்றினார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், மருதவாணன், உதயகுமார், கருப்பையன், சுப்பராயன், ராமச்சந்திரன், திருவரசு, ரவிச்சந்திரன் தேன்மொழி ராஜேஷ் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் ஆளவந்தார். பிரகாஷ், மேரி, சிவகாமி, வாஞ்சிநாதன், ராஜா, முத்துக்குமரன், பாலமுருகன், எழுமலை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.