
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில், பட்டியலின மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, சுவாமி சகஜானந்தா மக்கள் நல பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு,பேரவை நிறுவனத் தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் சம்பந்தம், பொதுச் செயலாளர் வழக்கறிஞர் தர்மராஜன் முன்னிலை வகித்தனர். ராஜுலு வரவேற்றார்.
வெகுஜன மக்கள் கட்சி மாநில தலைவர் சத்தியசீலன், அரசியல் மீட்பு இயக்க தலைவர் ராஜா, தமிழ் பிரபா, சமூக ஆர்வலர் தட்சணா, சேது செந்தில், கலை இலக்கிய பேரவை தலைவர் நாகவரசன், சகஜானந்தா மக்கள் நல பேரவையின் ஒன்றிய செயலாளர் சீனிவாசன், வாணி பன்னீர்செல்வம், குமராட்சி ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் பங்கேற்றனர்.