/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கள்ளச்சாராயத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை கள்ளச்சாராயத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை
கள்ளச்சாராயத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை
கள்ளச்சாராயத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை
கள்ளச்சாராயத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை
ADDED : ஜூன் 20, 2024 08:49 PM

கடலுார்: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க, மா.கம்யூ., கோரிக்கை வைத்துள்ளது.
கடலுார் மாவட்ட மா.கம்யூ., குழு கூட்டம், சூரப்பநாயக்கன் சாவடி கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருவரசு தலைமை தாங்கினார். மத்திய குழு உறுப்பினர் வாசுகி சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் மாதவன், மாநில குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, நிர்வாகிகள் ஆறுமுகம், மருதவாணன், உதயகுமார், கருப்பையன், சுப்புராயன், ராஜேஷ், கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து சுப்ரீம் கோர்ட் முறையான விசாரணை நடத்தவும், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தியும், மா.கம்யூ., கட்சி சார்பில் நாளை (22ம் தேதி) கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 36 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராயம் விற்பதை தடுக்க அரசு விரைந்து செயல்பட வேண்டும். இதற்கு உடந்தையாக உள்ள காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, அரசு 25 லட்சம் ரூபாய் நிவாரண வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.