/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுார் மத்திய சிறையில் விசாரணை கைதி சாவு கடலுார் மத்திய சிறையில் விசாரணை கைதி சாவு
கடலுார் மத்திய சிறையில் விசாரணை கைதி சாவு
கடலுார் மத்திய சிறையில் விசாரணை கைதி சாவு
கடலுார் மத்திய சிறையில் விசாரணை கைதி சாவு
ADDED : ஜூலை 07, 2024 02:40 AM
கடலுார்:கடலுார் மத்திய சிறையில், விசாரணைக் கைதி நெஞ்சுவலியால் உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த அவரப்பாக்ககத்தைச் சேர்ந்தவர் எழிலரசன் மகன் சுரேஷ், 30. இவர், போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஜூன் 7ல் கடலுார் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டார்.
நேற்று அதிகாலை சுரேஷுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
உடன் அவருக்கு மத்திய சிறை மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்கு கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து மத்திய சிறை அலுவலர் ரவி, 58; கொடுத்த புகாரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.