ADDED : ஜூலை 28, 2024 04:52 AM

புவனகிரி, : கீழ் புவனகிரி 'பிளாக் பேரல் பாய்ஸ்' கிரிக்கெட் அணி சார்பில், முதலாமாண்டு கிரிக்கெட் போட்டி நடந்தது.
புவனகிரி திடல் வெளியில் நடந்த கிரிக்கெட் போட்டியில் சிதம்பரம், புவனகிரி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட தாலுகாவை சேர்ந்த கிரிக்கெட் அணியினர் பங்கேற்று விளையாடினர்.
இதில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
டாக்டர் கதிரவன் முதல்பரிசாக ரூ.20 ஆயிரம், 2ம் பரிசாக கவுன்சிலர் ஜெயப்பிரியாரகுராமன் ரூ.15 ஆயிரம், 3ம் பரிசை ரவிக்குமார் ரூ.10 ஆயிரம், பா.ம.க., நகர செயலர் கோபிநாத் 4ம் பரிசாக ரூ. 7 ஆயிரம் வழங்கினர்.
போட்டியாளர்களுக்கு சீருடையை கவுன்சிலர் சண்முகம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் நெடுமாறன், டாக்டர் மங்களேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை 'பிளாக் பேரல் பாய்ஸ்' கிரிக்கெட் அணியினர் சேகர், மணிகண்டன், எழில், கபிலன், பிரசாந்த், கார்த்தி, கவுஷிக், ரவி, ராம், முத்து, மோகன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
ரமணா நன்றி கூறினார்.