/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கள்ளச்சாராய சாவு எதிரொலி; திட்டக்குடியில் 6 பேர் மீது வழக்கு கள்ளச்சாராய சாவு எதிரொலி; திட்டக்குடியில் 6 பேர் மீது வழக்கு
கள்ளச்சாராய சாவு எதிரொலி; திட்டக்குடியில் 6 பேர் மீது வழக்கு
கள்ளச்சாராய சாவு எதிரொலி; திட்டக்குடியில் 6 பேர் மீது வழக்கு
கள்ளச்சாராய சாவு எதிரொலி; திட்டக்குடியில் 6 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 20, 2024 09:00 PM
திட்டக்குடி: ராமநத்தத்தில் அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்றதாக 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்ததால், 40க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதன் எதிரொலியாக திட்டக்குடி அடுத்த ராமநத்தம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுவிற்பனை குறித்து போலீசார் அதிரடி ரெய்டு மேற்கொண்டனர். அதில் பட்டாக்குறிச்சி வேல்முருகன்,48, கூகையூர் மனோகரன்,48, கொரக்கவாடி ஜெகதீசன்,35, ராஜா,30, முருகன்,48, சுரேஷ்,40, ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிந்தனர். அவர்களிடமிருந்து தலா 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.