Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கூட்டுறவு வங்கி கடன் மேளா: ரூ. 7 கோடிக்கு வழங்க முடிவு

கூட்டுறவு வங்கி கடன் மேளா: ரூ. 7 கோடிக்கு வழங்க முடிவு

கூட்டுறவு வங்கி கடன் மேளா: ரூ. 7 கோடிக்கு வழங்க முடிவு

கூட்டுறவு வங்கி கடன் மேளா: ரூ. 7 கோடிக்கு வழங்க முடிவு

ADDED : ஜூன் 16, 2024 06:20 AM


Google News
Latest Tamil News
சிதம்பரம்: கூட்டுறவு வங்கி சார்பில் சிதம்பரத்தில நடந்த உடனடி கடன் மேளாவில், ரூ. 7 கோடிக்கு கடன் வழங்க முடிவு செய்யப்பட்டது.

கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் , சிதம்பரம் திருமண மண்டபத்தில் உடனடி கடன் மேளா நடந்தது. இதில் சிதம்பரம், அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை, புவனகிரி, காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, கிளை வங்கிகள் இணைந்து ஒரே இடத்தில் உடனடி கடன் மேளா நடத்தினர்.

கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் கோமதி தலைமை தாங்கினார்.

பொது மேலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். உதவி பொது மேலாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் பங்கேற்றனர்.

கடன் மேளாவில் பொதுமக்களுக்கு சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு, மகளிர் சுயஉதவிக்குழு கடன், ஊதியம் பெறும் மகளிர் கடன், ஆதரவற்ற கைம்பெண்கள் கடன், மாற்றுத்திறனாளி கடன், சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் கடன், வீட்டு வசதி கடன், வீடு அடமானக்கடன், விவசாயம் சார்ந்த மத்திய காலக்கடன், நாட்டுப்புற கலைஞர்களுக்கான கடன், தனிநபர் மற்றும் குழு கடன்களுக்கான 922 விண்ணப்பங்கள் தகுதி பெறப்பட்டு. ரூ. 7 கோடிக்கான உடனடி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டது.

பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் ஒரு வாரத்திற்குள் பரிசீலிக்கப்பட்டு கடன் வழங்கப்படும் என்றும், வரும் 20ம் தேதிவடலுாரில் கடன்மேளா நடக்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us