ADDED : ஜூன் 11, 2024 06:13 AM
திட்டக்குடி: திட்டக்குடி தாலுகாவில் 1433ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) இன்று துவங்குகிறது.
திட்டக்குடி தாலுகாவிற்கான ஜமாபந்தி இன்று (11ம் தேதி) துவங்கி, ஜூன் 26ம் வரை நடக்கிறது.
இன்று 11ம் தேதி திட்டக்குடி கிழக்கு குறுவட்டத்தை சேர்ந்த திட்டக்குடி, தி.இளமங்கலம், கோடங்குடி, எழுமாத்துார், ஈ.கீரனுார், மேலாதனுார், கீழாதனுார், ஆவினங்குடி, பட்டூர், நெய்வாசல், நிதிநத்தம், நாவலுார் கிராம பொதுமக்களிடமிருந்தும், நாளை 12ம் தேதி, பெருமுளை, செவ்வேரி, வையங்குடி, சிறுமுளை, புதுக்குளம், புலிவலம், நெடுங்குளம், குமாரை, கோழியூர், போத்திரமங்கலம்(கிழக்கு), போத்திரமங்கலம்(மேற்கு), ஆதமங்கலம், வதிஷ்டபுரம் கிராம பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட உள்ளது.
விருத்தாசலம் ஆர்.டி.ஓ., பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறுகிறார்.