/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திறன்மேம்பாட்டு பயிற்சி பெற கலெக்டர் அழைப்பு திறன்மேம்பாட்டு பயிற்சி பெற கலெக்டர் அழைப்பு
திறன்மேம்பாட்டு பயிற்சி பெற கலெக்டர் அழைப்பு
திறன்மேம்பாட்டு பயிற்சி பெற கலெக்டர் அழைப்பு
திறன்மேம்பாட்டு பயிற்சி பெற கலெக்டர் அழைப்பு
ADDED : ஜூன் 14, 2024 06:28 AM
கடலுார்: ஜவுளித்துறையில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வழங்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி யில் சேர விருப்பம் உள்ளவர்கள் இணைய தளம் மூலம் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பில்:
அரசு ஜவுளித் துறையில் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் துணிநூல் துறை சார்பில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு துணிநூல் துறை மூலம் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்து முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் https://tntextiles.tn.gov.in./jobs/ என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும் பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு கரூர் தான்தோன்றி மலையில் உள்ள துணிநுால் துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகம் 98945 60869, -94446 56445 எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.