/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கோஸ்டல் சிட்டி ரோட்டரி ஐம்பெரும் விழா கோஸ்டல் சிட்டி ரோட்டரி ஐம்பெரும் விழா
கோஸ்டல் சிட்டி ரோட்டரி ஐம்பெரும் விழா
கோஸ்டல் சிட்டி ரோட்டரி ஐம்பெரும் விழா
கோஸ்டல் சிட்டி ரோட்டரி ஐம்பெரும் விழா
ADDED : ஜூலை 17, 2024 12:04 AM

கடலுார் : கடலுார் ரோட்டரி கிளப் ஆப் கோஸ்டல் சிட்டி சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, சங்க தலைவர் செந்தில்பாரதி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை இந்திரா வரவேற்றார். துணை ஆளுனர் வெங்கடேசன், ஒருங்கிணைப்பாளர் மதியழகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆளுனர் (தேர்வு) வைத்தியநாதன், முன்னாள் மாவட்ட ஆளுனர் பிறையோன், ஸ்ரீதர்ம அம்மை மீனாட்சி தொண்டு அறக்கட்டளை தலைவர் சுதன்பவர் டெக் பூங்குன்றன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.
மேலும், கிராமப்புற பெண்களுக்கு 3 முந்திரி கொட்டை உடைக்கும் இயந்திரங்கள், 500 மரக்கன்றுகள், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பராமரிப்பு செய்து வழங்குதல் உள்ளிட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
அப்போது, ரோட்டரி சங்க ஆலோசகர் பட்டேல், பொருளாளர் விஜய் ஆனந்த், மதியழகன், முன்னாள் தலைவர்கள் ராஜசேகர், ஆறுமுகம், கருணாகரன், ரமேஷ், ஞானமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செயலாளர் சிவகுருநாதன் நன்றி கூறினார்.