/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : ஜூலை 25, 2024 06:12 AM

கடலுார்: கடலுார் அடுத்த வரக்கால்பட்டில் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்நடந்தது.
தாசில்தார் பலராமன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் வீரமணி, பார்த்திபன் முன்னிலை வகித்தனர்.அய்யப்பன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.பின், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை உட்பட 16 அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர்.
முகாமில், வரக்கால்பட்டு, காராமணிக்குப்பம், குணமங்கலம், பில்லாலி, மருதாடு, வெள்ளப்பாக்கம், அழகியநத்தம் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 700க்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுத்தனர்.அப்போது, ஊராட்சி தலைவர்கள் மனோகர், ஸ்ரீராம், முத்துக்குமாரசாமி, ஜெயந்திசரவணன், ராஜா, சுசீலா தேவநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் உமா பாஸ்கர், பமிதாகலாநிதி, ஊராட்சி துணை தலைவர் முருகன், ஊராட்சி செயலாளர் வேலவன், கேசவன்,நாராயணன், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர்மற்றும் அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.