/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் 'நடராஜா' கோஷம் முழங்க பக்தர்கள் பரவசம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் 'நடராஜா' கோஷம் முழங்க பக்தர்கள் பரவசம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் 'நடராஜா' கோஷம் முழங்க பக்தர்கள் பரவசம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் 'நடராஜா' கோஷம் முழங்க பக்தர்கள் பரவசம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் 'நடராஜா' கோஷம் முழங்க பக்தர்கள் பரவசம்
ADDED : ஜூலை 11, 2024 10:52 PM

சிதம்பரம்,:கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனிதிருமஞ்சன தரிசன விழா, கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது.
சித்சபையில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், உற்சவர்கள் சுப்ரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தனித்தனி தேர்களில் எழுந்தருளியதை தொடர்ந்து காலை, 7:45 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று 'நடராஜா' கோஷம் முழங்க வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
ஹிந்து ஆலய பாதுகாப்பு குழுவினர், தில்லை திருமுறைக்கழகம், அப்பர் தொண்டு நிறுவனம், தெய்வ தமிழ்ப்பேரவை சிவனடியார்கள், திருவாசக முற்றோதல் செய்தபடி தேருக்கு முன் சென்றனர். ஓதுவார்கள் திருமுறை இன்னிசை ஆராதனை நிகழ்த்தினர். சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் சிவன், பார்வதி வேடமணிந்து சிவ வாத்தியங்கள் முழங்க நடனமாடினர்.
மேலவீதியில், மீனவ சமுதாயத்தினர் சம்பிரதாய வழக்கத்தின்படி, மாலை, 4:00 மணியளவில் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு சீர் அளித்து, பட்டு சாத்தி மரியாதை செய்தனர். கீழ வீதியில் துவங்கிய தேரோட்டம் தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக மாலை கீழ வீதி தேர்நிலையை அடைந்தது. நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாள் தேரில் இருந்து ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு ஏககால லட்சார்ச்சனை நடந்தது.
இன்று மாலை, 3:00 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து, நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் நடனமாடியபடி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் தரிசன விழா நடக்கிறது. எஸ்.பி., ராஜாராம், ஏ.எஸ்.பி., ரகுபதி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.