/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரூ.7.02 கோடியில் பஸ் நிலையம் புதுப்பிக்கப்படும் சிதம்பரம் நகராட்சி சேர்மன் செந்தில்குமார் தகவல் ரூ.7.02 கோடியில் பஸ் நிலையம் புதுப்பிக்கப்படும் சிதம்பரம் நகராட்சி சேர்மன் செந்தில்குமார் தகவல்
ரூ.7.02 கோடியில் பஸ் நிலையம் புதுப்பிக்கப்படும் சிதம்பரம் நகராட்சி சேர்மன் செந்தில்குமார் தகவல்
ரூ.7.02 கோடியில் பஸ் நிலையம் புதுப்பிக்கப்படும் சிதம்பரம் நகராட்சி சேர்மன் செந்தில்குமார் தகவல்
ரூ.7.02 கோடியில் பஸ் நிலையம் புதுப்பிக்கப்படும் சிதம்பரம் நகராட்சி சேர்மன் செந்தில்குமார் தகவல்
ADDED : ஜூன் 25, 2024 07:26 AM

சிதம்பரம், : சிதம்பரம் பஸ் நிலையம் ரூ.7.02 கோடியில் நவீன மயத்துடன் புதுப்பிக்கப்படும் என, சேர்மன் செந்தில்குமார் தெரிவித்தார்.
சிதம்பரம் நகரமன்ற கூட்டம், சேர்மன் செந்தில்குமார் தலைமையில நேற்று நடந்தது.
கமிஷனர் மல்லிகா, பொறியாளர் சுரேஷ், துணைத் தலைவர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர்கள் ரமேஷ், அப்பு சந்திரசேகரன், மணிகண்டன், மக்கின், ராஜன் மற்றும் அசோகன், சுதாகர், புகழேந்தி உள்ளிட் அனைத்து கவுன்சிலர்கள் பங்கேற்று, கோரிக்கைகள் குறித்து பேசினர்.
அப்போது, சிதம்பரம் நகரில் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும், நீர் நிலை ஆக்கிரமிப்பில் குடியிருந்து, காலி செய்தவர்களுக்கு மாற்று இடம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும், நகரில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கபபட்டன.
கூட்ட முடிவில் சேர்மன் செந்தில்குமார் பேசுகையில், சிதம்பரம் நகரில் ரூ.2.40 கோடியில் நாகச்சேரி குளம், ரூ.1.70 கோடியில் ஓமக்குளம் புனரமைக்கும் பணி, ரூ. 7.02 கோடியில் சிதம்பரம் பஸ் நிலையம் நவீன பஸ் நிலையமாக புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், ரூ. 6.30 கோடியில் மேலவீதியில் வணிக வளாகம், ரூ. 2.70 கோடியில் தினசரி காய்கறி நாளங்காடியில் கூடுதல் பணிகள், ரூ. 2. 50 கோடியில் கொத்தங்குடி தெரு, மாலை காட்டி தெரு, வடக்கு வீதி நகராட்சி பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டடங்கள், ரூ.1.78 கோடியில், நகரில் 6 கழிப்பறைகள் கட்டுவது என, மொத்தம் ரூ. 24.40 கோடியில் திட்டப்பணிகள் மேற்கொள்ளபபட உள்ளது.
அடுத்த ஆண்டிற்குள், நகரமன்ற கூட்டத்தில் கோரிக்கை வைக்கும் அளவிற்கு குறைகள் இருக்காது என, தெரிவித்தார்.