/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிதம்பரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் சிதம்பரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம்
சிதம்பரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம்
சிதம்பரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம்
சிதம்பரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம்
ADDED : ஜூலை 29, 2024 04:47 AM

சிதம்பரம் : சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் தீ மிதி உற்சவம் கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலா நடந்துவருகிறது. நேற்று முன்தினம் 9ம் திருவிழாவான மோட்டார் தொழிலாளர்கள் உற்சவத்தை முன்னிட்டு, பஸ் நிலையத்தில் அலங்கார பந்தலில் மாரியம்மனை எழுந்தருளச் செய்து சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
மாலை நாதஸ்வர கச்சேரியும், இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து இரவு 11 மணிக்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லக்கில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று தேரோட்டம் நடந்தது.
தேரோட்டத்தையொட்டி காலை கோவிலில்இருந்து தேரில் அம்மன் எழுந்தருளச்செய்து, முக்கிய வீதிகள் வழியாக தேர் சென்று மாலை தேர் நிலையை அடைந்தது.
முக்கிய விழாவாக தீ மிதி திருவிழா இன்று நடக்கிறது. வரும் 30 ம் தேதி, விடையாற்றி உற்சவமும், ௩௦ம் தேதி இரவு ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவைச் சேர்ந்த பிரேமா வீராசாமி, கலியமூர்த்தி ஆகியோர் செய்து வருகின்றனர்.