Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ செயின் பறிப்பு; இருவர் கைது

செயின் பறிப்பு; இருவர் கைது

செயின் பறிப்பு; இருவர் கைது

செயின் பறிப்பு; இருவர் கைது

ADDED : ஜூலை 23, 2024 12:08 AM


Google News
திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார்,29; நேற்று மதியம் போத்திரமங்கலம் கிராம வயவெளியில் துாங்கினார்.

அப்போது அவ்வழியே வந்த பட்டூர் கிராமத்தை சேர்ந்த செந்தில்,35, மற்றும் மாயவன்,23, ஆகியோர், ஜெயக்குமாரின் கழுத்திலிருந்த ஒன்றரை சவரன் செயினை பறித்துச்சென்றனர். சிறிதுநேரம் கழித்து கண்விழித்துப் பார்த்த ஜெயக்குமாரின் செயினில் இருந்த 2 கிராம் டாலர் மட்டுமே கிடந்தது. இதுகுறித்து ஜெயக்குமார் அளித்த புகாரில், ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விசாரணையில் செந்தில் மற்றும் மாயவன் செயினை திருடியது தெரியவந்து, அவர்களை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us