/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வீடு புகுந்து திருட முயற்சி: 5 பேர் கைது வீடு புகுந்து திருட முயற்சி: 5 பேர் கைது
வீடு புகுந்து திருட முயற்சி: 5 பேர் கைது
வீடு புகுந்து திருட முயற்சி: 5 பேர் கைது
வீடு புகுந்து திருட முயற்சி: 5 பேர் கைது
ADDED : ஜூன் 30, 2024 05:27 AM
புவனகிரி : புவனகிரி அருகே நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற 5 பேரை அப்பகுதியினர் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.
புவனகிரி அடுத்த கீழமணக்குடி அக்ரஹாரா தெருவில் மர்ம மனிதர்கள் சிலர் நேற்று முன்தினம் சுற்றிவந்தனர். அப்பகுதியினர் விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதுடன், அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, அப்பகுதியில் உள்ள ரகுநாதன் என்பவர் வீட்டில் திருடுவதற்காக கதவை உடைத்துள்ளனர். சத்தம் கேட்டு அப்பகுயினர் ஓடிவந்து அவர்களை பிடித்தனர். பிடிபட்ட 5 பேரையும் தர்ம அடி கொடுத்து, புவனகிரி போலீசில் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் விசாரிக்கையில் அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் கடுகூரை சேர்ந்த சக்திவேல், 23; குமராட்சி அடுத்த வேட்டவலத்தை சேர்ந்த அன்பழகன், 67; காட்டுமன்னார்கோவில் காந்தியார் தெருவை சேர்ந்த சுரேஷ், 46; திருச்சி மாவட்டம் சமயபுரம் வி.ஓ.சி., நகரைச் சேர்ந்த மதியழகன்,45; மற்றும் கம்மாபுரம் அடுத்த மும்முடிசோழகன் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்,35; என்பது தெரியவந்தது.
அவர்கள் மீது புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.