ADDED : ஜூன் 24, 2024 05:40 AM

கடலுார், : கடலுாரில் கூத்தப்பாக்கம் கிளை பிராமணர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.
கிளைத் தலைவர் ராஜாராமன் தலைமை தாங்கினார். இளைஞரணி செயலாளர் லட்சுமணன் வரவேற்றார். மாநில செயலாளர் திருமலை பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பிராமணர் சமூக மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.
பொருளாளர் கணேசன், துனைத் தலைவர் சம்பத், உறுப்பினர்கள் லட்சுமி நாராயணன், பாலகுரு, வெங்கட்டரமணன், திருவேங்கடத்தான், பாலசுப்ரமணியன் வாழ்த்திப் பேசினர். தொடர்ந்து, சங்க அலுவலகம் எதிரில் உறுப்பினர் சங்கரன் உட்பட பலர் பங்கேற்றனர். இணை செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.