/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பாலிடெக்னிக் கல்லுாரியில் ரத்ததான முகாம் பாலிடெக்னிக் கல்லுாரியில் ரத்ததான முகாம்
பாலிடெக்னிக் கல்லுாரியில் ரத்ததான முகாம்
பாலிடெக்னிக் கல்லுாரியில் ரத்ததான முகாம்
பாலிடெக்னிக் கல்லுாரியில் ரத்ததான முகாம்
ADDED : ஆக 01, 2024 07:05 AM

சிதம்பரம்: சிதம்பரம் அடுத்துள்ள கூடுவெளி, அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.
இளையோர் செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் அன்பு சங்கிலி அறக்கட்டளை சார்பில் கல்லுாரி வாளாகத்தல் ரத்ததான முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் மேரி கிறிஸ்டினா தலைமை தாங்கினார். இளையோர் செஞ்சிலுவை சங்கம் திட்ட அலுவலர் பரமஜோதி, நாட்டு நலப்பணி திட்டம் திட்ட அலுவலர் வேல்முருகன் முன்னிலை வகித்தனர்.
இதில் கல்லுாரி மாணவ, மாணவிகள் மற்றும்பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, மாணவர்கள் பலர் ரத்ததானம் வழங்கினர். சிவக்கம் அரசு மருத்துவமனை குழுவினர் ரத்தானம் பெற்றனர்.