ADDED : ஜூன் 06, 2024 02:52 AM
பெண்ணாடம்: லோக்சபா தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதை வரவேற்று, பெண்ணாடத்தில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து, ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
பழைய பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாஜி., எம்.எல்.ஏ., தமிழ்அழகன் தலைமை தாங்கி, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
அப்போது, வழக்கறிஞர் வெங்கடாஜலபதி, நிர்வாகிகள் பிரபாகரன், சந்திரசேகர், ராஜன், பாண்டித்துரை, மகளிரணி மாவட்ட பொருளாளர் செந்தமிழ்ச்செல்வி, ஒன்றிய செயலர் சிங்காரம், கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஓ.பி.எஸ்., அணி நகர செயலர் செல்வராஜ், துணை செயலர் கிருஷ்ணமூர்த்தி, அய்யப்பன், அ.ம.மு.க., நகர செயலர் அய்யப்பன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.