/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிதம்பரத்தில் பைக் திருடன் கைது 8 பைக்குகள் பறிமுதல் சிதம்பரத்தில் பைக் திருடன் கைது 8 பைக்குகள் பறிமுதல்
சிதம்பரத்தில் பைக் திருடன் கைது 8 பைக்குகள் பறிமுதல்
சிதம்பரத்தில் பைக் திருடன் கைது 8 பைக்குகள் பறிமுதல்
சிதம்பரத்தில் பைக் திருடன் கைது 8 பைக்குகள் பறிமுதல்
ADDED : ஜூலை 23, 2024 11:21 PM

சிதம்பரம் : சிதம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பைக் திருடியவரை போலீசார் கைது செய்து, 8 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பைக் திருட்டு அதிகம் நடந்து வந்தது.
சில இடங்களில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் மர்ம நபர்கள் வாகன திருட்டு வீடியோவை ஆய்வு செய்தும் அவர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர். அதனை தொடர்ந்து, எஸ்.பி., உத்தரவின் பேரில், குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாபு, கோபி, உள்ளிட்டோர், சிதம்பரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதில் நாகை மாவட்டம் ஏனங்குடி, அஜிரா பேகம் தெருவை சேர்ந்த ராஜ் மகன் நவநீதகிருஷ்ணன்,26; என்பவர் சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் 8 மோட்டார் பைக் திருடி சென்றது தெரியவந்தது. அதையடுத்து, நவநீதகிருஷ்ணனை போலீசார் கைது செய்து, 8 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.