/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாடர்ன் நர்சரி பள்ளி தாளாளருக்கு விருது மாடர்ன் நர்சரி பள்ளி தாளாளருக்கு விருது
மாடர்ன் நர்சரி பள்ளி தாளாளருக்கு விருது
மாடர்ன் நர்சரி பள்ளி தாளாளருக்கு விருது
மாடர்ன் நர்சரி பள்ளி தாளாளருக்கு விருது
ADDED : ஜூலை 30, 2024 11:26 PM

கடலுார் : மதுரை தமிழ்ச் சங்க அரங்கில், தனியார் சுயநிதி பள்ளிகளின் கூட்டமைப்பு சார்பில் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., மற்றும் நர்சரி பள்ளிகளுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு, சங்க தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். செயலாளர் முத்துராமலிங்கம் வரவேற்றார். இதில், சிறப்பு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நக்கீரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகள் வழங்கினார். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிளுக்கு சென்டம் ரிசல்ட் அவார்டு மற்றும் 25 ஆண்டுகள் பள்ளி நடத்தி வரும் தாளாளர்களுக்கு சில்வர் ஜூப்ளி அவார்டும், அதற்குமேல் கல்வி சேவை செய்து வருபவர்களுக்கு கல்விச் செம்மல் விருதும் வழங்கப்பட்டது. வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சாமிதுரை, ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், சித்தார்த்தன் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் கடலுார் புதுப்பாளையம் மாடர்ன் நர்சரி பள்ளி தாளாளர் கலை புகழேந்திக்கு, கல்வி செம்மல் விருது வழங்கப்பட்டது.