/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விருதை - சென்னைக்கு ரயில் வசதி ரயில்வே கோட்ட மேலாளர் உறுதி விருதை - சென்னைக்கு ரயில் வசதி ரயில்வே கோட்ட மேலாளர் உறுதி
விருதை - சென்னைக்கு ரயில் வசதி ரயில்வே கோட்ட மேலாளர் உறுதி
விருதை - சென்னைக்கு ரயில் வசதி ரயில்வே கோட்ட மேலாளர் உறுதி
விருதை - சென்னைக்கு ரயில் வசதி ரயில்வே கோட்ட மேலாளர் உறுதி
ADDED : ஜூன் 09, 2024 03:51 AM

விருத்தாசலம், : விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் உறுதியளித்தார்.
விருத்தாசலம் ரயில் நிலையத்தில், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் கூடிய டிக்கெட் கவுண்டர், பயணிகள் காத்திருப்பு கூடம், நடைமேடைகள் விரிவாக்கம், சி.சி.டி.வி., கேமராக்கள், நவீன சிக்னல் அறைகள், குடிநீர், கழிவறைகள் வசதி, கார் பார்க்கிங், அலங்கார முகப்பு வளைவு உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
இதனை, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், 'விழுப்புரத்தில் இருந்து காலை 5:20 மணிக்கு புறப்படும், தாம்பரம் பயணிகள் ரயில், விருத்தாசலத்தில் இருந்து நீட்டிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், மும்பை போன்ற பெரு நகரங்களுக்கு நேரடி ரயில் சேவை துவங்குவது குறித்து ஆலோசனை செய்யப்படும். விருத்தாசலம் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் முடிந்ததும், உளுந்துார்பேட்டை சாலையில் செல்லும் பஸ்கள் அனைத்தும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
தொடர்ந்து, ரயில்வே குடியிருப்பில் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சிறுவர் பூங்காவை, தெற்கு ரயில்வேயில் பணிபுரியும் பெண்கள் அமைப்பின் தலைவர் சுவர்ணகலா அன்பழகன் திறந்து வைத்தார்.
முன்னதாக, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கோட்ட மேலாளர் அன்பழகன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
வடக்கு கோட்ட பொறியாளர் அஜய்குமார் மீனா, உதவி கோட்ட பாதுகாப்பு அதிகாரி அசோக்குமார், பொறியாளர் ஜெகதீஷ் சூரே, மக்கள் தொடர்பு அதிகாரி வினோத், எஸ்.ஆர்.எம்.யூ., கிளை தலைவர் செல்வம், செயலாளர் கணேஷ்குமார், துணை செயலாளர் சசிகுமார், பொருளாளர் வீரகுமார், ராதா, வெங்கடேசன் உடனிருந்தனர்.