ADDED : ஜூலை 12, 2024 06:13 AM
பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த எடையூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கருப்பையா, 30. இவரது மனைவி புவனேஸ்வரி, 28. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 3 வயதில் கபிலன் என்ற மகன் உள்ளார். கடந்த மாதம் 28ம் தேதி வெளிநாட்டில் இருந்து கருப்பையா சொந்த ஊர் வந்தார்.
மது அருந்தி வீட்டிற்கு வருவதாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 7ம் தேதி மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் மனமுடைந்த கருப்பையா, மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து மயங்கி விழுந்தார். சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கருப்பையா மனைவி புவனேஸ்வரி கொடுத்த புகாரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.