/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ எம்.எல்.ஏ., அலுவலக ' சீல்' அகற்றியபோது வாக்குவாதம் எம்.எல்.ஏ., அலுவலக ' சீல்' அகற்றியபோது வாக்குவாதம்
எம்.எல்.ஏ., அலுவலக ' சீல்' அகற்றியபோது வாக்குவாதம்
எம்.எல்.ஏ., அலுவலக ' சீல்' அகற்றியபோது வாக்குவாதம்
எம்.எல்.ஏ., அலுவலக ' சீல்' அகற்றியபோது வாக்குவாதம்
ADDED : ஜூன் 08, 2024 04:13 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் சீல் அகற்றியபோது, அதிகாரிகளுடன் காங்., நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிந்து, நன்னடத்தை விதிகள் நேற்று முன்தினம் விலக்கி கொள்ளப்பட்டது.
இதனால், எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளாட்சி சேர்மகன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் அலுவலகங்களில் இருந்த சீலை அகற்றும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர்.
அதன்படி, விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்தில் சீலை அகற்ற வருவாய் ஆய்வாளர் ரவிக்குமார், முதுநிலை வருவாய் ஆய்வாளர் (தேர்தல் பிரிவு) ஆனந்தகுமார், வி.ஏ.ஓ., செல்வக்குமார் வந்திருந்தனர்.
அங்கு, கழிவறை வசதியுடன் கூடிய இசேவை மைய கட்டடம் கட்டும் பணி நடக்கிறது.
இதனால், கட்டுமான பொருட்கள், இரும்பு கேட் ஆகியவை இடையூறாக இருந்தன. அப்போது, எம்.எல்.ஏ., நேர்முக உதவியாளர் பாஸ்கர், நகர தலைவர் ரஞ்சித்குமார், வட்டார தலைவர் சாந்தகுமார் ஆகியோர் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க மாட்டீர்களா என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், காங்., கட்சியினரும், வருவாய்த்துறையினரும் இணைந்து அங்கிருந்த பொருட்களை அப்புறப்படுத்தி, சீலை அகற்றினர்.
அதிகாரிகள் தகவல் தெரிவிக்காமல் வந்ததால், காங்., கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.