ADDED : ஜூலை 31, 2024 03:44 AM
நடுவீரப்பட்டு : பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் அயோத்தியன் மனைவி இளவரசி,50; இவர், நடுவீரப்பட்டில் மகள் வீட்டிற்கு நேற்று வந்தார். இவருக்கு இரவு 9:00 மணிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, நடுவீரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
பின், மேல் சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் இறந்தார். ஆத்திரமடைந்த உறவினர்கள், நடுவீரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று இரவு நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால், இளவரசி இறந்ததாக கூறி செவிலியர்களிடம் 10:00 மணிக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நடுவீரப்பட்டு போலீசார் சமாதானம் செய்தனர்.