பெண் என்பதால் புறக்கணிக்கிறார்களா..
பெண் என்பதால் புறக்கணிக்கிறார்களா..
பெண் என்பதால் புறக்கணிக்கிறார்களா..
ADDED : மார் 12, 2025 06:59 AM
கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தையொட்டி, தெற்கே கடற்கரை சாலை மற்றும் வடக்கே பழைய கலெக்டர் அலுவலக சாலையில் ரூ. 2.24 கோடி செலவில் 52 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்படுகிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா, மைதானத்தில் கடந்த 10ம் தேதி நடந்தது. விழாவில் பங்கேற்க மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் சில கவுன்சிலர்கள் வந்தனர். நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் தரப்பில் யாரும் வரவில்லை.
டென்ஷன் ஆன மேயர், அடிக்கல் நாட்டு விழாவுக்கு அதிகாரிகள் கூறித்தான் நான் வந்தேன். அவர்கள் யாரையும் காணவில்லை என, புலம்பியபடி இருந்தார். அப்போது, உதவி பொறியாளர் பாரதி மற்றும் சில அதிகாரிகள் நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு வந்தனர். அவர்களிடம், என்னை வரவழைத்துவிட்டு நீங்கள் வராமல் இருந்தால் என்ன நியாயம். நான் பெண் மேயர் என்பதால் புறக்கணிக்கிறார்களா, தொடர்ந்து, 4, 5 நிகழ்ச்சிகளில் இதே நிலைதான் நடக்கிறது என, ஆவேசமாக பாய்ந்தார். மேயரின் ஆவேசத்தால் அதிகாரிகள் பதில் கூற முடியாமல் நெளிந்தனர்.