/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அக்காத்தம்மன் கோவிலில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு அக்காத்தம்மன் கோவிலில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு
அக்காத்தம்மன் கோவிலில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு
அக்காத்தம்மன் கோவிலில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு
அக்காத்தம்மன் கோவிலில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு
ADDED : ஜூலை 17, 2024 12:33 AM

பண்ருட்டி : திருவதிகை அக்காத்தம்மன் கோவிலில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருவதிகை அக்காத்தம்மன் கோவிலில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தராஜன் தலைமையில் பொதுப்பணித்துறை கட்டட பொறியாளர்கள் குழுவினர் கோவிலில் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது கோவில் கட்டட பணி மதிப்பீடு, அனுமதி பெற்று கோவில் புனரமைப்பு பணிகள் நடந்ததா ? அனுமதி யார் வழங்கியது என்பது குறித்து விசாரணை நடத்தினர். காலை 10:30 மணிக்கு துவங்கிய ஆய்வு மதியம் 1:00 மணி வரை நடந்தது.
பண்ருட்டி மாஜி எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையின் தொடர்ச்சியாக, இந்த ஆய்வு நடந்தது.