/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வடலுாரில் ம.தி.மு.க, ஆண்டுவிழா மாவட்ட செயலாளர் அழைப்பு வடலுாரில் ம.தி.மு.க, ஆண்டுவிழா மாவட்ட செயலாளர் அழைப்பு
வடலுாரில் ம.தி.மு.க, ஆண்டுவிழா மாவட்ட செயலாளர் அழைப்பு
வடலுாரில் ம.தி.மு.க, ஆண்டுவிழா மாவட்ட செயலாளர் அழைப்பு
வடலுாரில் ம.தி.மு.க, ஆண்டுவிழா மாவட்ட செயலாளர் அழைப்பு
ADDED : ஜூலை 28, 2024 06:40 AM

கடலுார், : ம.தி.மு.க., சார்பில் வடலுார் பஸ் நிலையத்தில் நடைபெறும் ஆண்டு விழாவில் தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என, மாவட்ட செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து ம.தி.மு.க., (கிழக்கு) மாவட்ட செயலாளர் ராமலிங்கம் விடுத்துள்ள அறிக்கை:
கடலுார் கிழக்கு மாவட்டம், வடலுார் நகரம் சார்பில் ம.தி.மு.க., 31வது ஆண்டு துவக்க விழா லோக்சபா தேர்தல் வெற்றி விழா மரக்கன்று வழங்கும் விழா மற்றும் கொடியேற்று விழா நாளை (28ம் தேதி) மாலை 6:00 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து பஸ் நிலையத்தில் சிறப்பு பொதுக்கூட்டம் நடக்கிறது.
கூட்டத்திற்கு வடலுார் நகர செயலாளர் பழனிவேல் தலைமை தாங்குகிறார். விவசாய அணி தட்சிணாமூர்த்தி வரவேற்கிறார். பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர்கள் ராஜாராம், கிருபாசங்கர் முன்னிலை வகிக்கின்றனர். சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் செந்திலதிபன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். மேலும் தலைமைக் கழக பேச்சாளர் ராசாராம், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் சிவராமன், மாவட்ட பொருளாளர் மதன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் கட்சியினர் திரளாக பங்கேற்ற கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.