ADDED : ஜூன் 02, 2024 05:45 AM

கடலுார்: கடலுார் மாநகர பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் பிறந்த நாள் விழா நடந்தது.
கடலுார் முதுநகர் காந்தி பூங்காவில் நடந்த விழாவில், கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை தாங்கி, அஞ்சலை அம்மாள் சிலைக்கு மாலை அணிவித்தார். இணை ஒருங்கிணைப்பாளர் சுப்ராயன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக வாசிப்பவர் இயக்கம் பால்கி, உலக திருக்குறள் பேரவை மாவட்டத் தலைவர் பாஸ்கரன், மீனவர் பேரவை பொருளாளர் மாலைமணி, பலராமன் மற்றும் சண்முகவேலு பங்கேற்று மரியாதை செலுத்தினர்.