Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆனி திருமஞ்சன தரிசன விழா கனகசபை மீதேறி தரிசனம் முதல்வருக்கு தெய்வீக பக்தர்கள் பேரவை கோரிக்கை மனு

ஆனி திருமஞ்சன தரிசன விழா கனகசபை மீதேறி தரிசனம் முதல்வருக்கு தெய்வீக பக்தர்கள் பேரவை கோரிக்கை மனு

ஆனி திருமஞ்சன தரிசன விழா கனகசபை மீதேறி தரிசனம் முதல்வருக்கு தெய்வீக பக்தர்கள் பேரவை கோரிக்கை மனு

ஆனி திருமஞ்சன தரிசன விழா கனகசபை மீதேறி தரிசனம் முதல்வருக்கு தெய்வீக பக்தர்கள் பேரவை கோரிக்கை மனு

ADDED : ஜூலை 07, 2024 04:01 AM


Google News
Latest Tamil News
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் தரிசன விழாவில், பக்தர்கள் தடையின்றி கனகசபை மீதேறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என தெய்வீக பக்தர்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பேரவை நிறுவன தலைவர் ஜெமினி ராதா, தமிழக முதல்வர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனு:

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன துவங்கி நடைபெற்று வருகிறது. வரும் 11ம் தேதி, தேர் திருவிழாவும், 12ம் தேதி ஆனி திருமஞ்சன தரிசனமும் நடக்கிறது.

அதனையொட்டி, 10, 11, 12, 13 ஆகிய 4 நாட்கள் கனகசபை மீதுதேறி நடராஜரை வழிபட பொது தீட்சிதர்கள் தடை விதித்துள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு, கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

அதன் அடிப்படையில் பக்தர்கள் கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கனக சபையில் நின்று சுவாமி தரிசனம் செய்ய உரிமை இல்லை என தீட்சிதர்கள் கூறுகின்றனர்.

அவர்கள், மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனி திருமஞ்சன தரிசன விழா நடைபெறும் நாட்களில் பக்தர்கள் தடையின்றி கனசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை எழாதபடி அறநிலையத்துறை பணியாளர்கள், பாதுகாப்புடன் பணி மேற்கொள்ள காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

மேலும், பக்தர்களின் நலன் கருதி வரும் 12ம் தேதி நடக்கும் ஆனி திருமஞ்சன தரிசன விழா நேரத்தை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.

இதுதவிர பக்தர்களின் வசதிக்காக குடிநீர், தற்காலிக கழிவறை, முதலுதவி அவசர சிகிச்சை மையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us