விவசாய தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம்
விவசாய தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம்
விவசாய தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம்
ADDED : மார் 14, 2025 05:12 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த கீழ்வளையமாதேவியில் விவசாய தொழிலாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.
சங்க செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மணி, கிளை செயலாளர் லட்சுமிகாந்தன் முன்னிலை வகித்தனர். மாவட்ட விவசாய தொழிலாளர்கள் சங்க செயலாளர் பிரகாஷ் சிறப்புரையாற்றினார். இதில், கீழ்வளையமாதேவியில் ஆதிதிராவிடர் நலத்துறையால் இலவச மனைப் பட்ட வழங்க நிலம் கையகப்படுத்தப்பட்டு 35 ஆண்டுகளாக வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளது. நெய்வேலி என்.எல்.சி., விவசாய தொழிலாளர்கள், பொதுமக்களை அழைத்து முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும். ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்காமல் இருப்பதை கண்டித்து வரும் 24 ஆம் தேதி கீழ்வளையமாதேவி வி.ஏ.ஓ., அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.