ADDED : ஜூலை 20, 2024 05:19 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அண்ணாகிராமம் வட்டாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து திருமண மண்டபம் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
வட்டார மருத்துவ அலுவலர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன், மலேரியா அலுவலர் மூர்த்தி, மாவட்ட நலக்கல்வியாளர் சுரேஷ்பாபு, சுகாதார மேற்பார்வையாளர் சுப்ரமணியம், பார்த்திபன், துப்புரவு ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மண்டபங்களை துாய்மையாக பராமரிக்க வேண்டும். விழா நடத்துபவர்களை சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்க வலியுறுத்த வேண்டும். மக்கும் குப்பைகளை மக்க வைக்க வேண்டும். சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென, அறிவுறுத்தப் பட்டது.