ADDED : ஜூன் 16, 2024 10:48 PM

சிதம்பரம் : அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், உலக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினத்தையொட்டி, பதிவாளர் தலைமையில் உறுதிமொழி ஏக்கப்பட்டது.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், ஜூன் 15 உலக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது. பல்கலைக்கழக ஸ்ரீநிவாச சாஸ்திரி அரங்கத்தின் வாயிலின் நடந்த நிகழ்வில், பதிவாளர் சிங்காரவேல், உறுதிமொழி வாசிக்க, தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், புலமுதல்வர்கள், துறைத்தலைவர்கள், இயக்குநர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.