/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தவ அமுதம் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா தவ அமுதம் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா
தவ அமுதம் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா
தவ அமுதம் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா
தவ அமுதம் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா
ADDED : ஜூலை 18, 2024 04:40 AM

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாளையொட்டி கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தாளாளர் செங்கோல் தலைமை தாங்கினார். முதல்வர் புனிதவள்ளி முன்னிலை வகித்தார். செயல் இயக்குனர் சாலை கனகதாரன் வரவேற்றார்.
லயன்ஸ் கிளப் தலைவர் டாக்டர் நிஷாந்த், நாளா கிளப் தலைவர் தனரேகா சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று கட்டுரை, பேச்சு, ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.
பள்ளி ஒருங்கிணைப்பாளர் உஷாராணி நன்றி கூறினார்.