/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நல்லுார் வில்வனேஸ்வரர் கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை நல்லுார் வில்வனேஸ்வரர் கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை
நல்லுார் வில்வனேஸ்வரர் கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை
நல்லுார் வில்வனேஸ்வரர் கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை
நல்லுார் வில்வனேஸ்வரர் கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை
ADDED : ஜூலை 30, 2024 05:29 AM

வேப்பூர்: வேப்பூர் அடுத்த நல்லுார் வில்வனேஸ்வரர் கோவிலில், ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை நடந்தது.
வேப்பூர் அடுத்த நல்லுார் ஸ்ரீ வில்வனேஸ்வரர் கோவிலில், வடக்கு பார்த்த நிலையில், வள்ளி தெய்வானை சமேத முருகன் அருள்பாலிக்கிறார்.
கோவிலில், ஆடி கிருத்திகையொட்டி சுவாமிகளுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட திரவியப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. வெள்ளிக் கவசம் சாற்றி, திருப்புகழ் பாடி சிறப்பு வழிபாடு நடந்தது.
ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தி.மு.க., ஒன்றிய துணைச் செயலர் அன்புக்குமரன், இளைஞரணி ஒன்றிய துணை அமைப்பாளர் தனசேகர், ஊராட்சி தலைவர்கள் புஷ்பா குமரேசன், ராணி முருகேசன், பத்திர எழுத்தர் முருகன், பாஸ்கர் மற்றும் ஆடி கிருத்திகை கமிட்டி குழுவினர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.