ADDED : ஜூன் 11, 2024 06:12 AM
கடலுார்: கடலுார் அருகே லாரி மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அடுத்த நம்புதலை பகுதியை சேர்ந்தவர் நைனாமுகமது மகன் இஸ்மத் கான், 20; கடலுார் முதுநகரில் ஓட்டலில் பணிபுரிந்து வந்தார்.
இவர் நேற்று அதிகாலை பைக்கில் கடலுார் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார்.
முதுநகர் திருமண மண்டபம் அருகே சென்றபோது, நின்றிருந்த டிப்பர் லாரி மீது பைக் மோதியது. இதில் இஸ்மத்கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.