/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுார் விளையாட்டு மைதானத்தில் சின்தட்டிக் டிராக்கை காணோம் கடலுார் விளையாட்டு மைதானத்தில் சின்தட்டிக் டிராக்கை காணோம்
கடலுார் விளையாட்டு மைதானத்தில் சின்தட்டிக் டிராக்கை காணோம்
கடலுார் விளையாட்டு மைதானத்தில் சின்தட்டிக் டிராக்கை காணோம்
கடலுார் விளையாட்டு மைதானத்தில் சின்தட்டிக் டிராக்கை காணோம்
ADDED : ஜூலை 18, 2024 08:33 AM

கடலுார் : கடலுார் மஞ்சக்குப்பத்தில் பழமைவாய்ந்த அண்ணா விளையாட்டு மைதானம் உள்ளது. விஸ்தாரமான இங்கு, ஆண்டுதோறும் சுதந்திர தினம், குடியரசு தின நாட்களில் கொடியேற்றப்படுகிறது. மாவட்ட அளவிலான போட்டிகள் இங்கு நடத்தப்பட்டு வருகிறது.
இம்மைதானத்தில் வாலிபால், கூடைப்பந்து, கால்பந்து, டென்னீஸ், பேட்மிண்டன் உள் அரங்கம், கிரிக்கெட், இறகுப்பந்து, பூப்பந்து, உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட பல்வேறு ஆடுகளங்கள் தனித்தனியாக உள்ளன. நாள்தோறும் நுாற்றுக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டரங்கத்தில் 400 மிட்டர் சின்தட்டிக்கால் ஆன ஓடுதளம் உள்ளது. ஆனால், அவை முறயைாக பராமரிக்கப்படாமல், மண்மேடுகள் குவிந்தும், கட்டாந்தாரையாகவும், சில இடங்களில் குண்டும் குழியுமாகவும் மாறியுள்ளது. சாதாரண மழைக்கே தண்ணீர் தேங்கி குளமாகி விடுகிறது. இதனால், ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் தினமும் உடற்பயிற்சிக்கு வருபவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, விளையாட்டு வீரர்களுக்கு வசதியாக, சின்தட்டிக் ஓடுதளத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.