Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மகனை தற்கொலைக்கு துாண்டியதாக தந்தை, சித்தி மீது வழக்கு

மகனை தற்கொலைக்கு துாண்டியதாக தந்தை, சித்தி மீது வழக்கு

மகனை தற்கொலைக்கு துாண்டியதாக தந்தை, சித்தி மீது வழக்கு

மகனை தற்கொலைக்கு துாண்டியதாக தந்தை, சித்தி மீது வழக்கு

ADDED : ஜூலை 21, 2024 06:19 AM


Google News
Latest Tamil News
திட்டக்குடி: திட்டக்குடி அருகே மகனை தற்கொலைக்கு துாண்டியதாக தந்தை மற்றும் சித்தி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

திட்டக்குடி அடுத்த தொளார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவரது மகன் செல்லமுத்து, 50: விவசாயி. தாய் இறந்துவிட்டதால் எழில்ராணி, 44, என்ற பெண்ணை, ராஜேந்திரன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு தனியாக வசிக்கிறார். கடந்த 14ம் தேதி செல்லமுத்து மனைவி மூக்காயி மற்றும் எழில்ராணிக்கு இடையே இடப்பிரச்சினை குறித்து தகராறு ஏற்பட்டது. எழில்ராணி தரப்பில் ஆவினங்குடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக கடந்த 15ம் தேதி, செல்லமுத்து போலீஸ் நிலையம் சென்றார். அங்கு, எதிர்தரப்பினர் அவரை திட்டியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த செல்லமுத்து, களைக்கொல்லி மருந்தை குடித்தார்.

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் 19ம் தேதி இறந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த செல்லமுத்துவின் உறவினர்கள், நேற்று காலை ஆவினங்குடி போலீஸ் நிலையம் முன் சாலை மறியலில் செய்ய திரண்டனர். செல்லமுத்துவை தற்கொலைக்கு துாண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரினர். அவர்களை சமாதானம் செய்து அனுப்பிய போலீசார், செல்லமுத்துவை தற்கொலைக்கு துாண்டியதாக, அவரது தந்தை ராஜேந்திரன் மற்றும் சித்தி எழில்ராணி ஆகியோர் மீது ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us