/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிறுமிக்கு திருமணம் வாலிபர் மீது வழக்கு சிறுமிக்கு திருமணம் வாலிபர் மீது வழக்கு
சிறுமிக்கு திருமணம் வாலிபர் மீது வழக்கு
சிறுமிக்கு திருமணம் வாலிபர் மீது வழக்கு
சிறுமிக்கு திருமணம் வாலிபர் மீது வழக்கு
ADDED : ஜூலை 11, 2024 05:52 AM
திட்டக்குடி : சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது, குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் மணிவேல்,28. இவர் 17வயது சிறுமி ஒருவரை காதலித்து, கடந்த ஏப்ரல் 21ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
தற்போது அந்த சிறுமி, நான்கு மாத கர்ப்பமாக உள்ள நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றார். மைனர் பெண் கர்ப்பமாக இருந்ததால், மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து நல்லுார் ஒன்றிய ஊர் நல அலுவலர் விஜயா அளித்த புகாரின் பேரில், ஆவினங்குடி போலீசார், மணிவேல் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.