Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஓசி சரக்கு கேட்டு ரகளை நெய்வேலில் 3 பேர் கைது

ஓசி சரக்கு கேட்டு ரகளை நெய்வேலில் 3 பேர் கைது

ஓசி சரக்கு கேட்டு ரகளை நெய்வேலில் 3 பேர் கைது

ஓசி சரக்கு கேட்டு ரகளை நெய்வேலில் 3 பேர் கைது

ADDED : ஜூலை 15, 2024 11:50 PM


Google News
நெய்வேலி: நெய்வேலி தனியார் பாரில், ஓசியில் மதுபானம் கேட்டு ரகளையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெய்வேலி மத்திய பஸ் நிலையம் அருகே தனியார் பார் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பாரில் ஓசியில் சரக்கு கேட்டு, 3 பேர், பாரில் இருந்த மதுபாட்டில்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.

இது குறித்து பார் உரிமையாளர் கொடுத்த புகாரில், டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் தப்பியோடிய 3 பேரை பிடித்தனர்.

அவர்கள் நெய்வேலி வட்டம் 21 புதுத்தெருவை சேர்ந்த வீரபாண்டியன் மகன் சுபாஷ் 20, வட்டம் 3 ஏ.கே.டி., பிரகாசம் சாலையை சேர்ந்த சிவசங்கரன் மகன் கிருஷ்ணா, 22, வட்டம் 10ல் உள்ள ஊசி தெருவை சேர்ந்த பெருமாள் மகன் குருமூர்த்தி, 21; என்பது தெரிய வந்தது.

நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிந்து மூவரையும் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us