ADDED : ஜூன் 02, 2024 05:37 AM
கடலுார்: கடலுார், கோண்டூரைச் சேர்ந்தவர் ராஜகோபால்,70; லாரி டிரைவரான இவர், நேற்று கடலுார் பீச்ரோட்டில் உள்ள சரவணபவ கூட்டுறவு பண்டக சாலையில் பொருட்களை இறக்கிவிட்டு, லாரியை நிறுத்தி வைத்திருந்தார்.
அப்போது, கடலுார், புதுப்பாளையத்தை சேர்ந்த கார்த்திக், 34; நடராஜன் மகன் அரவிந்த்,23; அருள்ராஜ், 35; ஆகியோர் லாரியில் இருந்த ரூ.2,500 மதிப்புள்ள இரும்பு லிவர் மற்றும் கம்பியை திருடினர். அதனைக் கண்டு திடுக்கிட்ட ராஜகோபால், கூச்சலிட்டு அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மூவரையும் பிடித்து புதுநகர் போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் வழக்கு பதிந்து, மூவரையும் கைது செய்தனர்.