/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பஸ் மீது லாரி மோதி விபத்து டிரைவர் உட்பட 20 பேர் காயம் பஸ் மீது லாரி மோதி விபத்து டிரைவர் உட்பட 20 பேர் காயம்
பஸ் மீது லாரி மோதி விபத்து டிரைவர் உட்பட 20 பேர் காயம்
பஸ் மீது லாரி மோதி விபத்து டிரைவர் உட்பட 20 பேர் காயம்
பஸ் மீது லாரி மோதி விபத்து டிரைவர் உட்பட 20 பேர் காயம்
ADDED : ஜூலை 12, 2024 06:12 AM

கிள்ளை: சிதம்பரம் அருகே மேம்பாலத்தில் அரசு விரைவு பஸ் மீது, லாரி மோதிய விபத்தில், பஸ் டிரைவர், கண்டக்டர் உட்பட 20 பேர் படுகாயமடைந்தனர்.
பேராவூரணியில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு அரசு விரைவு பஸ் புறப்பட்டது. சென்னை சிட்டலாம்பாக்கத்தை சேர்ந்த நாராயணன், 58; என்பவர் ஓட்டிச்சென்றார். சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் அரசு கலைக்கல்லுாரி அருகே மேம்பாலத்தில் அதிகாலை 1:00 மணிக்கு சென்றபோது, எதிரே வந்த லாரி மோதியது. இதில், டிரைவரின் கட்டுபாட்டை இழந்த அரசு விரைவு பஸ், சர்வீஸ் சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில், பஸ் டிரைவர் நாராயணன், கண்டக்டர் ரமேஷ் மற்றும் பஸ் பயணிகள் உட்பட 20 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து, அரசு விரைவு பஸ் டிரைவர் நாராயணன் கொடுத்த புகாரில், கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிந்து, விசாரித்து வருகிறார்.