/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரூ.10,000 லஞ்சம் பெற்ற ஆர்.ஐ., உட்பட 2 பேர் கைது ரூ.10,000 லஞ்சம் பெற்ற ஆர்.ஐ., உட்பட 2 பேர் கைது
ரூ.10,000 லஞ்சம் பெற்ற ஆர்.ஐ., உட்பட 2 பேர் கைது
ரூ.10,000 லஞ்சம் பெற்ற ஆர்.ஐ., உட்பட 2 பேர் கைது
ரூ.10,000 லஞ்சம் பெற்ற ஆர்.ஐ., உட்பட 2 பேர் கைது
ADDED : ஜூன் 08, 2024 01:56 AM

கடலுார்:கடலுார், மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் செல்வம், 40, தச்சு தொழிலாளி. இவர், தன் வீட்டின் பின் பகுதியில் மரப்பட்டறை வைக்க ெஷட் அமைத்துள்ளார்.
இதற்கு சொத்து வரி நிர்ணயிக்க கோரி, கடலுார் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன், அதற்கு 50,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வம், கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய 10,000 ரூபாயை நேற்று மாலை 3:30 மணிக்கு, மாநகராட்சி அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர் பாஸ்கரனிடம், செல்வம் வழங்கினார்.
அப்போது, மறைந்திருந்த போலீசார், லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன், 55, மற்றும் உடந்தையாக இருந்த உதவியாளர் லட்சுமணன், 45, ஆகிய இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து அலுவலகம் முழுதும், மாலை 6:00 மணி வரை தீவிர சோதனை நடத்தினர்.
இச்சம்பவத்தால், மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
இந்த அலுவலகத்தில் கட்டடம் மற்றும் மனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்க, லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரின் படி, கடந்தாண்டு மார்ச் 15ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.